2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மார்ச் 20ல் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்படுமென, ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இலங்கை தொடர்பான இந்த அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செலி பச்சிலெட் அல்லது பிரதி உயர்ஸ்தானிகர் சமர்ப்பிப்பாரென்று எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, அதைப் பகிரங்கமாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  

பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு, கடந்த வாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20ஆம் திகதியன்று, இலங்கை தொடர்பான விவாதத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பாச்செலெட் அல்லது பிரதி ஆணையாளர், பேரவையில் சமர்ப்பிப்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பகிரங்கமாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை, மார்ச் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும் என்றும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, காணாமற் போனோர் அலுவலகத்துக்கான ஆணையாளர்கள், அதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு 20 மாதங்களுக்கு முன்னர், கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே நியமிக்கப்பட்டனரென, ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

காணாமற்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து, கணிசமான வேலைகளைச் செய்து வருவதாகவும் எனினும், இன்னும் நீண்ட நாள்களுக்கு அந்தப் பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றும், அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.  

இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த​ பொதுமக்களின் காணிகளை, உரிமையாளர்களிடமே மீண்டும் கையளிக்கும் நடவடிக்கை, கடந்த மார்ச் மாதத்தில், போதிய அளவில் இடம்​பெற்று இருக்காததையும், ​ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவனித்திருந்ததென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .