2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதம நீதியரசரின் மனு தள்ளுபடி

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மாகாண சபைகள் தேர்தல் (திருத்தம்) சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறைமையானது, தன்னுடைய அடிப்படை உரிமையை மீறியுள்ளது. ஆகையால், அந்த திருத்தச் சட்டம், சட்டவிரோதமானது என அறிவிக்குமாறே, அம்மனுவில் அவர் கோரியிருந்தார்.

அம்மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமின் பெரும்பான்மை தீர்மானத்தின் பிரகாரமே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலே, நீதியரசர்கள் குழாம் தள்ளுப்படி செய்தது.
இந்த மனு, பிரதம நீதியரசர் பிரசாத் டெப், நீதியரசர்களான புவனேக அலுவிஹார, நளீன் பெரேரா ஆகிய மூவரடங்கி குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் திறந்த நீதிமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுத்த பிரதம நீதியரசர் பிரசாத் டெப், மூவரடங்கிய நீதியரசர் குழாமில், பெரும்பான்மைத் தீர்மானத்தின் பிரகாரம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்கப்பட்டது என்றார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, தன்னுடைய மனு​வில், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தாமல், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை, அரசமைப்புக்கு முரணானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவுக்கு எதிராக பூர்வாங்க ஆட்சேபனைகளைத் தெரிவித்த சட்டமா அதிபர் உள்ளிட்ட சில குழுவினர், அந்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதால், அது தொடர்பில், நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பமுடியாது என்றனர்.

மேற்குறிப்பிட்ட சகல காரணங்களையும் கருத்திற்கொண்ட உயர்நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாமலே தள்ளுபடி செய்தது.

இந்த சட்டமூலம், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .