2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முருங்கை காய் விலையில் வீழ்ச்சி; தேங்காய்க்கும் பெரும் தட்டுப்பாடு

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம், ரஸீன் ரஸ்மின்   
கிண்ணியா பிரதேசத்தில், முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்ற, அதேவேளை, புத்தளத்தில் ஏற்பட்டுள்ள, கடும் வரட்சியின் காரணமாக, தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.   

கிண்ணியா பிரதேசத்தில் முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய விலையின் படி ஒரு கிலோகிராம் 5ரூபாய் தொடக்கம் 15 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் முருங்கைக்காய், ஒரு மாதத்துக்கு முன்னர், 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.   

கிண்ணியா பிரதேசத்தில், பைசல் நகர், அண்ணல் நகர், மஹ்ரூப் நகர், பெரியாற்று முனை மற்றும் குறிஞ்சாக்கேணி உட்பட இன்னும் பல பகுதிகளிலும் அதிகமாக, முங்கைக்காய்கள் இம்முறை காய்த்துள்ளன.   

கிண்ணியாவில் பறிக்கப்படும் முருங்கைக்காய்கள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இதேவேளை, புத்தளத்தில் நிலவுகின்ற கடும் வரட்சியின் காரணமாக, அங்கு தேங்காய்க்கு, பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக, மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   

அத்துடன், புத்தளம், கற்பிட்டி மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில், சிறிய தேங்காய் ஒன்று 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.   

அவ்வாறு விலைகொடுத்து, கொள்வனவு செய்யும் தேங்காய்கள் சில சந்தர்ப்பங்களில் பழுதடைந்ததாக, காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.   

எனினும், தேங்காய்களை கொள்வனவு செய்வதை விடவும் தேங்காய் பால் மா பக்கெற்களையே, ௯டுதலான மக்கள் தற்போது, கொள்வனவு செய்து வருவதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .