2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’வட மாகாண சபை சுயலாப அரசியலை நடத்துகிறது’

Editorial   / 2018 மே 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

"வடமாகாண மக்ளுக்கு எதையும் செய்யப்போவதில்லை என்ற சாதனையை நிலைநாட்டியுள்ள வடமாகாண சபை,  உயிரிழந்த மக்களை வைத்து சுயலாப அரசியலை நடத்திவருகிறது" என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்,  நேற்று  (22) இடம்பெற்ற செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டமூலம், மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்  தொடர்ந்து கருத்துத்  தெரிவிக்கையில், "சிங்கப்பூர் ஒப்பந்தத்தால் நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தால்,  வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பால், வடக்கு கிழக்கு உட்பட நாட்டு மக்கள் பாதிப்படைந்தனர்.

சம்பந்தப்பட்டோருடன் கலந்துரையாடாமல், மக்கள் உயிருடன் சம்பந்தப்பட்டத் தரப்பினர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு விளையாடுகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பை அழைத்து பேசாமல்  இருப்பதாலேயே, இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல்  உள்ளது.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு விசேடவரி விதிக்கப்பட்டாத சந்தர்ப்பத்தில் இந்த அந்த நாட்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான காரணம் என்ன? என்ற சந்தேகம் எழுகிறது.

இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்டத் தரப்புக்கு அறிவுறுத்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்போது இழப்புகள் ஏற்படும் வகையில் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது." எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .