2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வடக்கைப்​ பற்றிக்கூற ரஞ்சனால் முடியாது’

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக உரிமை, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, வடக்கு மாகாணத்துக்கு வந்து உண்மையைக் கண்டறிந்து, தெற்குக்குத் தெரியப்படுத்தக்கூடிய ஒருவராகத் தெரியவில்லையெனக் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவரது செயற்பாடுகளில் உண்மையில்லை என்றும் விமர்சித்துள்ளார்.  

வடக்கை வந்து பார்த்து, இங்குள்ள மக்களின் கருத்துகளை அறிந்து செல்லுமாறு, முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, இது தொடர்பில், முதலமைச்சருக்குக் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.   இது தொடர்பில் விளக்கியுள்ள முதலமைச்சர், தனிச் சிங்களத்திலேயே ரஞ்சன் ராமநாயக்க கடிதங்களை அனுப்பியுள்ளார் என்றும் அவற்றை மொழிபெயர்க்கக் கொடுத்துள்ளதாகவும் கூறியதோடு, தொடக்கமே பிழை போலத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், தான் அவரை, வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே, விஜயகலா மகேஸ்வரனிடம் சம்மதம் பெறாமல், அவருடனான கருத்துப் பரிமாற்றங்களை, ரஞ்சன் ராமநாயக்க, இணையத்தளத்தில் வெளியிட்டாரெனக் குற்றஞ்சாட்டியுள்ள சி.வி, இது ஒரு குற்றமாகக் கணிக்கக்கூடிய விடயமென்றும் குறிப்பிட்டுள்ளார்.  

தான் அவரை, காலஞ்சென்ற விஜய குமாரதுங்க போன்ற ஒருவரென்றே முதலில் எண்ணியிருந்த போதிலும், தன்னுடைய எண்ணம் தவறென இப்போது தெளிவாகியுள்ளதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .