2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விஜயகலா விவகாரம்; பிரசன்ன, விமலிடம் இன்று விசாரணை

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரையும், இன்றைய தினம் (16), நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற குழப்பம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணவீர மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட எம்.பிகள், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சபைக்கு நடுவே சென்று, செங்கோலுக்கு முன்பாகவிருந்து எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.  

இதன்போது, விமல் வீரவன்சவின் பெயரை, “பெயர் குறிப்பிட வேண்டிவரும்” என, கடுந்தொனியில் எச்சரித்த சபாநாயகம், அவருடைய செயற்பாடுகள் குறித்து வெட்கமடைவதாகவும் கூறினார்.   அதுமட்டுமன்றி, “உங்களுடைய வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள், கடுமையானவை என்றுத் தெரிவித்த சபாநாயகர், வாயைப் பத்திரபடுத்திக் கொள்ளுங்கள்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சபை நடுவே விளையாடுகிறார் என்றும் நாடாளுமன்றத்துக்கென ஒழுக்கம் உள்ளதென்றும் அதைப் பின்பற்றுமாறும், விமல் வீரவன்சவைப் பார்த்துக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .