2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விஜயதாஸவுக்கு ​எதிரான யோசனைக்கு அங்கிகாரம்: திங்கள் தீர்மானம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் பரபரப்புக்கு மத்தியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கூடிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.  

அந்த யோசனைக்கு, நிறைவேற்றுக்குழு ஏகமனதாக அங்கிகாரம் அளித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. எனினும், எதிர்வரும் 21ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலேயே, இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.  

கட்சியின் செயற்குழுக்கூட்டம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்றுக்காலை 10:30க்கு கூடியது.   

தேர்தல் வாக்குறுதிகளின் பிரகாரம், ஊழல், மோசடி தொடர்பிலான வழக்கை, விரைவுபடுத்த நடவடிக்கைக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி, நீதியமைச்சர் விஜயதாஸவை விமர்சித்து, இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.  

இந்த யோசனை தொடர்பில், சுமார் இரண்டு மணிநேரம் கருத்தாடல்கள் இடம்பெற்றன என்று, அறியமுடிகிறது. அந்த கருத்தாடல்களின் பின்னர், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கருத்துரைத்துள்ளார்.   

“நான் எந்தவிதமான பிழையையும் செய்யவில்லை” என, அவர் தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு, தன்னால் இயலக்கூடியவை எதுவுமில்லை என்று, நீதியமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தெரிவித்ததாக, பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் நிறைவடையும் முன்னர், அரசுடைமையாக்கப்படும் என்று தான் ஒருபோதும் கூறியதில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார என, அறியமுடிகிறது.   

நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹசீம், கூட்டுபொறுப்புகளை மீறியோருக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றார்.   

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் எதிர்வரும் 21ஆம்திகதியன்று கூடவிருக்கிறது. அந்த கூட்டத்தின் போது, இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .