2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் கடத்தியவருக்கு மரணத்தண்டனை

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு ஹெரோயினைக் கடத்தி வந்து கொழும்பின் பல இடங்களிலும் விநியோகித்த நபருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (23) மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளினால் சமூகம் பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டிய நீதவான் குறித்த நிலையிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பதற்குரிய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணமாக இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாஸ்டர் என்றழைக்கப்படும் செயிக் இஸ்மாயில் அக்பார் என்பவருக்கே இவ்வாறு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் திகதி முகத்துவாரம் ரஜமல்வத்தை பிரதேசத்தில் 51.88 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தக் குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக நீதிமன்றத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .