2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு ஆணைக்குழு அழைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக குறித்த அறிவித்தல் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு இன்று (15) உத்தியோகப்பூர்வமான அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேமசிறி பெர்ணான்டோ, மக்கள் வங்கியின் தலைவராக செயற்பட்ட 2016, 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் வங்கிக்கு கணினிகள் கொள்வனவு விடயத்தில் நிதி மோசடி இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய  அவரிடம் சாட்சியம் பதிவுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .