2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அந்தஸ்த்து கிடைக்காவிட்டால் ஆட்சியை நிறுத்திவிடுவோம்’

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜனவரி 17 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும். நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டக்குள் நியாயமான அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறாவிட்டால், எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்” என, மதிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்  எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

 

திருகோணமலையில்  நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் அபயபுர வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம், இராஜவரோதயம் சதுக்கத்தில் நேற்று  (16) மாலை இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாடு சுதந்திரம் பொற்ற காலம் முதல் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு முறையும் மாற்றான் கட்சியல் இருந்து ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், எமது மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். தமது வாக்குப்பலத்தை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள் எனபதை உணர்த்துகிறது. மக்கள் கொள்கையில் இருந்து விலகவில்லை. இது சரித்திர ரீதியாக கண்ட உண்மை.

“ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை பிரகடத்தின் படி ஒரு மக்களை அவர்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி புரிய முடியாது. ஆனால் கடந்த 70 வருடங்களாக எமது சம்மதம் இல்லாமல் எங்களை இந்த நாட்டில் ஆட்சி புரிபவர்கள் எம்மை ஆண்டு வந்துள்ளார்கள். இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது .

“நாங்கள் இன்று அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்களுடைய பல கருமங்களை தீவிரமாக கையால வில்லை என்றும் எம்மீது குற்றம் சாட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். அது தவறு, நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல. நாங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களும் அல்ல அமைச்சர்களாக வரமாட்டோம். எமது பிரச்சினை தீரும் வரை அமைச்சர்களாக வரமாட்டோம். எமது மக்கள் தமது உள்ளக சயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய கருமங்களை அவர்களே கையாளக் கூடிய நிலை ஏற்படும் வரை நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .