2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை - சீன உறவுகளைச் சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி ஆரம்பம்

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ரிஷா

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர நட்புறவின்  அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி, நட்புறவுப் புகைப்படக் கண்காட்சி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாட்டிய ஆளுநர்,  இலங்கை - சீனா இராஜதந்திர உறவுகள் பலமாக உள்ளது. யுத்த காலத்திலும் எமக்கு சீனா உதவியது. தற்போது அதிகளவான சீன முதலீடுகள், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.

இலங்கையின்  சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து தற்போது வரையிலான இலங்கை - சீன இராஜ தந்திர உறவுகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட செயலகமும்   சீனா நட்புறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்புகைப்படக்கண்காட்சி, திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நாளை வியாழக்கிழமையும் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரை  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார சீனா நட்புறவு சங்கத்தின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .