2024 மே 08, புதன்கிழமை

‘உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை ஏன் சிறையிலடைக்கவில்லை?’

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையில் அடையுங்களெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லையெனவும் மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்களை வழங்க முடியவில்லையெனவும் குற்றஞ்சுமத்தினார்.

கிண்ணியாவில் நேற்று (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குற்றஞ்சுமத்தினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“நாம் ஆட்சிக்கு வந்த மறுநாளே மத்திய வங்கிக் கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகளையும்  சிறையிலடைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை. மக்களுக்கு வழங்குவதாக கூறிய நிவாரணங்களை வழங்க முடியவில்லை” என்றும் தெரிவித்தார்.

“எமது  நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் கொடுப்பனவை நிறுத்தியுள்ளார்கள். நாம் குறைத்த மருந்துப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நாம் வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளார்கள். 

“ஏன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கேட்டால் நாடாளுமன்றத்தில் எமக்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். நாங்கள் 2015ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய போது எமக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. பெரும்பான்மை இன்றியே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரித்தோம். நூறு நாள்கள் திட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

“மீண்டும் மீண்டும் மக்கள் முன் பொய்கூறாமல் மத்திய வங்கிக் கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X