2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் அதிகளவான முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள்’

எப். முபாரக்   / 2018 ஜனவரி 18 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.  இவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் கூடுதலாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள் என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று(17)தெரிவித்தார்.   

 

திருகோணமலை நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ் சம்முனை ஆதரித்து திருகோணமலை சோனகர்வாடியில் எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஐக்கிய தேசிய ஆட்சிக் காலத்தில், அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் சேவையாற்றியுள்ளார்கள். 1977 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரையான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பொற்காலமென வர்ணிக்கப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் கூட ஐக்கிய தேசிய ஆட்சிக்காலத்தின் போதுதான் துறைமுகங்கள் மற்றும் கைத்தொழில் பேட்டை போன்றன ஏற்படுத்தப்பட்டன.

எனது தந்தை அமைச்சராக இருந்த காலத்தில் கூட மக்களுக்கு தேவையான அதிகமான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாங்கள் அளிக்கின்ற வாக்குறுதிகளை பிற்போடுவதில்லை மக்களை சிரமத்திற்குள்ளாகமல் சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியே அதிகமான சபைகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் இதற்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்புகளும் இன்றியமையாததாக காணப்படுகின்றது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .