2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஜனாஸா எரிக்கப்பட்டமையை ஏற்க முடியாது’

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நீர்கொழும்பு வைத்தியசாலையில், நேற்று(30) உயிரிழந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

நீர்கொழும்பு முஸ்லிம் மகனுடைய ஜனாஸாவை தகனம் செய்ததானது, அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனை முஸ்லிம்களாகிய தாம்; ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், நீர்கொழும்பில் மரணித்த சகோதரனை, இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவருக்காக அனைத்து உறவுகளும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றினால் உலக அளவில் முஸ்லிம்கள் மரணித்துள்ளனர் என்றும் அவர்கள் உரிய இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவும் ஆனால் இந்நாட்டில் ஏன் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளர்.
 
இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இது விடயத்தில் முஸ்லிம் மார்க்க தலைமைகள் அரசாங்கத்தோடு பேசி  தக்க முடிவை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டிக் கொள்வதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .