2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெங்கைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குப்பைத் தொட்டிகள் வழங்கி வைப்பு

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின்  கீழ், திண்மக்கழிவு முகாமைத்துவத்தை ஏற்படுத்தி, டெங்கு டெங்கு நுளம்பு பெருகுவதை முற்றாகக் கட்டுப்படுத்தும் பொருட்டு, 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான கழிவு தொட்டிகள், கிண்ணியா பிரதேச சபையால் வழங்கி வைக்கப்பட்டன

கிண்ணியா பிரதேச சபைச் செயலாளர் எஸ். அஸ்வத்கான் தலைமையில், இன்று (17) நடைபெற்ற நிகழ்வில், கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள், மதஸ்தலங்கள் உட்பட 50  பொது இடங்கங்களுக்கு தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  எஸ்.சுதாகரன் , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம். றிஸ்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .