2024 மே 11, சனிக்கிழமை

தம்பலகாமம் பட்ஜெட் நிறைவேற்றம்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

தம்பலகாமம்  பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான  வரவு – செலவுத்திட்ட அறிக்கை, சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்ட முன்மொழிவதற்கான அமர்வு, சபைத் தலைவர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் நேற்று (24)   நடைபெற்றது.

சபையின் தவிசாளர் உள்ளிட்ட 16 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு - செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 03 உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன -03, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -02, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி -03, ஐக்கிய தேசியக் கட்சி  - 02, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -02, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-01 என மொத்தமாக 16 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .