2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மகாவலி நீரைத் திசைதிருப்பும் திட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

மகாவலி நீரைத் திசைதிருப்பும் திட்டத்துக்கு, 2019ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதியில், சர்வேதச கேள்வி அறிவித்தல் கோரப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றனவென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இன்று (12) தெரிவித்தார்.

கிண்ணியா விவசாயிகள் பாரிய எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகாவலி நீரை, கிண்ணியா பிரதேச குளங்களான குரங்குபாஞ்சான் குளம், வெள்ளங்குளம், சுங்கான்குழி குளம், பட்டியானூர் குளம், தீனேரிவெளி போன்ற இடங்களுக்கு கொண்டுவருவதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மகாவலி நீரைத் திசைதிருப்பம் இத்திட்டத்தினூடாகப் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கான நீர் கிடைக்கப் பெறுவது மட்டுமன்றி, சிறுபோகம்,பெரும்போகம் என இரண்டு வகை விவசாயத் திட்டங்களை இதனூடாக மேற்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

சவூதி அரசாங்கத்தின் நிதியில் இருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .