2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்,

போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட கொடியில் சேகரிக்கப் பட்ட பணத்திலிருந்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவ- மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில்  நடைபெற்றது .

இந் நிகழ்வில் சமூர்த்தி தலைமை முகாமையாளர்  மற்றும் சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி  உத்தியோகத்தர்கள், கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  கிராம அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 31 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவில் இருந்தும் முதற் கட்டமாக தலா  ஒருவர் வீதமாக இந்த வறுமை  கோட்டின் கீழ் வாழும் மாணவர்களை அடையாளப் படுத்தி அவருக்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .