2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்’

Editorial   / 2019 மே 13 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதபோதிலும் சில வைத்தியசாலைகளில், முஸ்லிம்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கோரியுள்ளார்.  

அனுராதபுர தாதியர் பாடசாலையில், நேற்று (12) இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

ஹபாயாக அணிந்து வந்த பெண்களுக்கு, வைத்தியம் செய்ய மறுத்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்றும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் பதிவாகக்கூடாது என்றும் அவர் கூறினார்.  

யார் நோயாளர்களாக வந்தாலும் அவர்களுக்கு ​வைத்தியம் செய்ய வேண்டும் என்றும் சட்டத்தை மதித்துச் செயற்படுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .