2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’அரசாங்கத்தின் பங்காளி எதிர்க்கட்சியாக முடியாது’ செல்வம்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தாலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பிடம் இருந்து பறிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுத் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் தமிழ் மிரர் வினயபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

"ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தெரிவானவர்களே, தேசிய அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சி, எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவர்களுக்குக் கிடைக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .