2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மரண தண்டனை விதிக்கப்பட்டே தீரும்'

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.

“அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்” என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .