2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ் கோட்டைக்குள் இராணுவம் செல்வதை தடுக்க முடியாது?

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண கோட்டை, இராணுவத்தினர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டப் பகுதி இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ​ஒன்றை மேற்கொண்டிருந்த​போதே அவர் நேற்று இதனை தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண கோட்டையில் இராணுவம் பல தலைமுறைகளாக உள்ளது. இது முதல்முறையல்ல. இராணுவம் தொடர்ந்து அங்கு நிலைகொண்டிருக்கும். எனவே, இராணுவம் கோட்டையை கையகப்படுத்தியதாக கூறுவதில் உண்மையில்லை.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ் கோட்டை இலங்கையின் ஒரு பகுதி அது ஈழத்துக்கோ அல்லது இந்தியாவிற்கோ சொந்தமானதில்லை.

அங்கு இராணுவத்தினர் செல்வதற்கு எதிர்ப்பு வெளியிடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .