2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு பரிந்துரை

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பிலான ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (21) அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் மென்தன்மையைப் பேணினார் என்ற குற்றச்சாட்டு, விஜயதாச ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் சுதந்திரமான நீதித்துறையில் தான் தலையிடுவதில்லையென விஜயதாச ராஜபக்ஷ கூறிவந்திருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த 17ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருந்தன.
அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் அவகாசம் நேற்று வரை வழங்கப்பட்ட போதிலும் அவர் பதிலளிக்கத் தவறியிருந்தார்.
நாடாளுமன்ற குழுக்களின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியதாகவும் அறிய முடிகிறது.
இவ்விடயங்களை கருத்திற்கொண்டே விஜயதாச ராஜபக்ஷ, தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்தது.

அதனைத் தொடர்ந்து அத்தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு பிரதமர் அறிவித்துள்ளார். எப்படியிருந்த போதிலும் அமைச்சுப் பதவியை நீக்குவது தொடர்பிலான இறுதி முடிவை ஜனாதிபதியே மேற்கொள்வார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .