2024 மே 09, வியாழக்கிழமை

ரூ.1,000 சம்பள உயர்வுகோரி தனிநபர் போராட்டம்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா சத்தியேந்திரா என்பவர், தனி நபர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.   

மேற்படி நபர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டதுடன், தனது உடல்களில் வேல்களைக் குத்திக்கொண்டு, அக்கரப்பத்தனையிலிருந்து கொழும்பு, ஜனாதிபதி செயலகத்துக்கு நடைபவனியை, வெள்ளிக்கிழமை (9) ஆரம்பித்திருந்தார்.   

கிளாஸ்கோ வள்ளடியான் ஆலயத்தில் பூஜையை முடித்துகொண்டு, டயகம நகரத்தில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த அவர், ஜனாதிபதி செயலகத்தை, நேற்று  (10) இரவு 8 மணியளவில் சென்றடைந்தார்.   
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இவ்விடயத்தில் நல்ல தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென்று கோரியும் மகஜரொன்றை இதன்போது, ஜனாதிபதி செயலத்தின் அதிகாரிகளிடம் அவர் கையளித்துள்ளார்.   

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, நியாயமானத் தீர்வை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதுடன், அதற்காகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததாகம் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X