2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ணம்

Editorial   / 2019 மே 23 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் 2022ஆம் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்குரியதாக விரிவுபடுத்தும் முன்மொழிவை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நேற்று நிராகரித்துள்ளது.

முழுமையான கலந்தாலோசனையைத் தொடர்ந்து, தற்போதைய நிலமைகளின் கீழ் கட்டாரில் 2022ஆம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்குரியதாக விரிவுபடுத்த முடியாதென அறிக்கையொன்றில் தெரிவித்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், ஆகையால் முன்னரே திட்டமிருந்தபடி 32 அணிகளுடன் கட்டாரில் 2022ஆம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரானது நடைபெறுமென்றும், அடுத்த மாதம் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் காங்கிரஸில் எந்தவித முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படாது எனக் கூறியுள்ளது.

கட்டாரின் அயல் நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன் போன்றவை கட்டார் மீதான தமது இரண்டாண்டு முடக்கத்தைத் தவிர்த்து, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை நடாத்த உதவ வேண்டியிருந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்காக விரிவுபடுத்தும் தனது திட்டத்தை 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் நடைமுறைப்படுத்தும் யோசனையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், ஜியானி இன்பான்டினோவால் ஆதரவளிக்கப்படும் 24 அணிகள் கொண்டதான கழக உலகக் கிண்ணத்தை புறக்கணிக்கப்போவதாக ஐரோப்பாவின் முன்னணிக் காலப்ந்தாட்டக் கழகங்கள் இவ்வாண்டு மார்ச்சில் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது மேற்குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

48 அணிகளுடனான கட்டாரின் உலகக் கிண்ணத் தொடரானது 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையான மேலதிக வருமானத்தைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .