2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3ஆவது போட்டி இன்று: இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

அந்தவகையில், இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு, இரண்டாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் தோல்வியடைந்திருந்த இலங்கை, இத்தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்றைய போட்டி உட்பட தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தையும் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

இலங்கையணியைப் பொறுத்தவரையில், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க, பழைய மலிங்கவாக இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகின்றமை சாதகமாய் அமைவதுடன் சுழற்பந்துவீச்சும் ஓரளவு சிறப்பானதாகவே காணப்படுகின்ற நிலையில் துடுப்பாட்டமே சிக்கலானதாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், பின்தொடைத் தசைநார் காயம் காரணமாக குசல் பெரேரா இப்போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவருக்குப் பதிலாக அணியில் சதீர சமரவிக்கிரம இடம்பெறுவார் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அல்லது சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க ஆகியோரில் ஒருவராவது நீண்ட இனிங்ஸொன்றை விளையாடி பெரியதொரு ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதிலேயே இலங்கையின் வெற்றி காணப்படுகிறது. இதுதவிர, களத்தடுப்பிலும் பாரிய முன்னேற்றத்தை இலங்கை காண்பிக்க வேண்டியுள்ளது.

மறுபக்கமாக, அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், ஜோ றூட்டிடமிருந்தே குறிப்பிடத்தக்களவான ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுள்ள நிலையில், ஜேசன் றோய், ஜொனி பெயார்ஸோடோ, பென் ஸ்டோக்ஸிடமிருந்து குறிப்பிடத்தக்களவான ஓட்டங்களை அவ்வணி எதிர்பார்க்கின்றது.

இதேவேளை, இடுப்புப் பகுதிக்கும் தோட்பட்டைக்கும் இடையிலான பகுதியில் ஏற்பட்ட உபாதையைத் தொடர்ந்து குறித்த தொடருக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் லியம் டோஸன் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக குழாமில் துடுப்பாட்ட வீரர் ஜோ டென்லி சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், இன்றே பல்லேகலவை ஜோ டென்லி அடையவுள்ள நிலையில், அணியின் லியம் டோஸனை இன்றைய போட்டியில் டொம் கர்ரன், மார்க் வூட், சாம் கர்ரன் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களிலொருவரே பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .