2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

4 நாள் டெஸ்டில் 2 நாளிலேயே வென்றது தென்னாபிரிக்கா

Editorial   / 2017 டிசெம்பர் 28 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, சிம்பாப்வே அணிகளுக்கிடையே, போர்ட் எலிஸபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த வரலாற்றின் முதலாவது நான்கு நாள் பகல் – இரவு டெஸ்டில் நேற்று இரண்டாவது நாளியே தென்னாபிரிக்க அணி வென்றது.

தமது முதலாவது இனிங்ஸில், 4 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களைப் பெற்றவாறு நேற்று  இரண்டாம் நாளை ஆரம்பித்த சிம்பாப்வே,  68 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில், கைல் ஜார்விஸ் 23, றயான் பேர்ள் 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மோர்னி மோர்கல் 5, கஜிஸ்கோ றபடா, அன்டிலி பெக்லுவாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், பொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே  121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இனிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கிரேய்க் எர்வின் 23, அணித்தலைவர் கிறேமி கிறீமர் ஆட்டமிழக்காமல் 18, பிரெண்டன் டெய்லர் 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேஷவ் மஹராஜ் 5, அன்டிலி பெக்லுவாயோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக, தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், ஏய்டன் மர்க்ரம் 125, ஏ.பி. டி வில்லியர்ஸ் 53, தெம்பா பவுமா 44. டீன் எல்கர் 31, குயின்டன் டி கொக் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கைல் ஜார்விஸ், கிறிஸ் மெபு ஆகியோர் தலா 3, கிறேமி கிறீமர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக ஏய்டன் மர்க்ரம் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .