2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

58ற்குள் சுருண்டது இங்கிலாந்து

Editorial   / 2018 மார்ச் 22 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 58 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

ஒக்லேன்டில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்துக்கு வழங்கியது. 

துடுப்பாட்டத்தில் ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இங்கிலாந்து அணி 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. அதன் பின்னர் விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கின. ஒரு கட்டத்தில் 27 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்ளையும் இழந்து மோசமான சாதனையை படைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில் ஒன்பதாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கிரெய்க் ஓவர்டன் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியை மோசமான சாதனையில் இருந்து மீட்டார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஐந்து வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். நியுசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 6 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .