2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிறிஸ்டல் பலஸிடம் தோற்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நேற்று  மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், கிறிஸ்டல் பலஸுக்கும் இடையிலான போட்டியில் அவ்வணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

கிறிஸ்டல் பலஸ் சார்பாக, வில்ஃபிரைட் ஸாகா இரண்டு கோல்களையும், அன்றோஸ் டெளன்ட்சென்ட் ஒரு கோலையும் பெற்றனர். மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொனி வான் டீ பீக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் வெஸ்ட் ப்ரோமிவிச் அல்பியனுக்குமிடையிலான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது. எவெர்ற்றன் சார்பாக, டொமினிக் கல்வேர்ட்-லூயின் மூன்று கோல்களையும், ஜேம்ஸ் றொட்றிகாஸ், மைக்கல் கீன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் சார்பாக, கிராடி டியன்கனா, மத்தேயுஸ் பெரைரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுக்கிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, எடி நிகெட்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிஷைல் அந்தோனியோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .