2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அத்லெட்டிகோ மட்ரிட்டை எதிர்கொள்கிறது ஜுவென்டஸ்

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்து சம்பியன்ஸ் லீக்கைக் கைப்பற்ற எதிர்பாள இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டை எதிர்கொள்கிறது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குலுக்கலிலேயே இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் மோதும் அணிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டை எதிர்கொள்கிறது.

இதேவேளை, கடந்த முறை இறுதிப் போட்டி வரை வந்த இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், இன்னொரு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சை எதிர்கொள்கிறது.

இதுதவிர, பிறிதொரு இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், நடப்புச் சம்பியனான ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், நெதர்லாந்துக் கழகமான அஜாக்ஸை எதிர்கொள்கிறது.

இதுதவிர, பிறிதொரு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனஒ எதிர்கொள்கிறது.

இந்நிலையில், மற்றொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, பிறிதொரு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான எவ்.சி ஷகல்கேயை எதிர்கொள்கிறது.

இதேவேளை, இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா, போர்த்துக்கல் கழகமான எவ்.சி போர்ட்டோவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், குறித்த சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 12, 13, 19, 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், இரண்டாவது சுற்றுப் போட்டிகள், அடுத்தாண்டு மார்ச் 5, 6, 12, 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

குழுநிலைப் போட்டிகளில் வெற்றியாளர்களான அணிகள், தமது முதலாவது சுற்றுப் போட்டியில் எதிரணியின் மைதானங்களில் விளையாடவுள்ளன.

ஒரே நாட்டு அணிகளுக்கிடையிலான மோதலும் குழுநிலையில் ஏற்கெனவே மோதிய அணிகளையும் தவிர்த்துப் பார்த்துமே குறித்த குலுக்கல் இடம்பெற்று இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் மோதும் அணிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .