2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரையிறுதியில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல்

Editorial   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகியன தகுதிபெற்றுள்ளன.

மன்செஸ்டர் சிற்றி, நேற்று  இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் இல்கி குன்டோகன் கொடுத்த பந்தை பெர்னார்டோ சில்வா கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதிக் கணத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த பெனால்டியை ஜேமி வார்டி கோலாக்க, போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையிலிருந்தன.

இதைனையடுத்து, மேலதிக நேரத்துக்கு போட்டி சென்றது. அதிலும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டிக்கு போட்டி சென்றது. பெனால்டியில், மன்செஸ்டர் சிற்றியின் இல்கி குன்டோகன், யாயா தோரே, லூகாஸ் நெமெஞ்சா, கப்ரியல் ஜெஸுஸ் ஆகியோர் தமது பெனால்டிகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தவும் லெய்செஸ்டர் சிற்றியின் ஜேமி வார்டியின் பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு வெளியே செல்லவும் றியாட் மஹ்ரேஸின் பெனால்டியை கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ தடுக்க, 4-3 என்ற ரீதியில் பெனால்டியில் வென்ற மன்செஸ்டர் சிற்றி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

குறித்த போட்டியில், ஏறத்தாழ இரண்டு அணிகளின் இரண்டாம் தர அணிகளே களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற மற்றைய காலிறுதிப் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டை வென்ற ஆர்சனல் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றது. இப்போட்டியிலும் கூட இரண்டு அணிகளும் தமது இரண்டாம் தர அணிகளையே களமிறக்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .