2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் தொடர் ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடர், இந்தியாவின் தேராதூனில் நாளை மறுதினம் இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

இத்தொடரை பங்களாதேஷ் 2-1 என வெல்லும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருக்கும் இலங்கையணி எட்டாமிடத்துக்கு முன்னேறும் என்பதுடன், ஆப்கானிஸ்தான் எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 3-0 என ஆப்கானிஸ்தானை பங்களாதேஷ் வெள்ளையடித்தால் ஆப்கானிஸ்தான் 10ஆம் இடத்துக்கு கீழிறங்குவதோடு, 10ஆம் இடத்திலிருக்கும் பங்களாதேஷ் ஒன்பதாமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .