2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹோபார்ட்டில் இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் 5 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலியா வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டேவிட் மலன் 50 (36), அணித்தலைவர் ஒயின் மோர்கன் 22 (14) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் 22 (15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிளென் மக்ஸ்வெல் 3, அஸ்தன் அகர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 156 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 103 (58), டார்சி ஷோர்ட் 30 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக கிளென் மக்ஸ்வெல் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .