2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வெளியேற்றியது பங்களாதேஷ்

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில், இந்தியாவை வென்ற பங்களாதேஷ், தொடரிலிருந்து இந்தியாவை வெளியேறச் செய்துள்ளது.

மழை காரணமாக 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 32 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சல்மான் கான் ஆட்டமிழக்காமல் 39 (38), அனுஜ் றாவட் 34 (53) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், றொபியுல் ஹக் 3, நயீம் ஹஸன், ஆதிப் ஹொஸைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 28 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், பினக் கோஷ் ஆட்டமிழக்காமல் 81 (77), தெளஹீட் ஹிரிடோய் ஆட்டமிழக்காமல் 48 (32), நைம் ஷேய்க் 38 (44) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் மந்தீப் சிங் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .