2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது.

வெம்ப்ளியில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே, இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது.

தமது வழமையான சிறப்பான ஆட்டத்தை மன்செஸ்டர் சிற்றி வெளிப்படுத்தியிருக்காதபோதும், சக மத்தியகளவீரர் கெவின் டீ ப்ரூனேயிடமிருந்து வந்த பந்தை, போட்டியின் நான்காவது நிமிடத்தில் தமது முன்கள வீரர் கப்ரியல் ஜெஸூஸ் தலையால் முட்டிக் கோலாக்கியதோடேயே 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.

பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் போராடி, பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் கோல் பெற்றிருக்க முடியவில்லை. இப்போட்டியின் இரண்டாவது பாதியில், அவ்வணியின் முன்களவீரர் கிளென் மரே கோல் பெறவிருந்த நிலையில், அதை கோல் கம்பத்துக்கு அருகில் வைத்து மன்செஸ்டர் சிற்றியின் பின்கள வீரர் அய்மரிக் லபோர்ட்டே தடுத்திருந்தார்.

இதேவேளை, காணொளி உதவி மத்தியஸ்தர் மீளாய்வொன்றின் பின்னர் அதிர்ஷ்டவசமாக இப்போட்டியின் முதற்பாதியில் சிவப்பு அட்டை காட்டப் பெறாமல் மன்செஸ்டர் சிற்றியின் இன்னொரு பின்கள வீரரான கைல் வோக்கர் தப்பியிருந்தார். பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் முன்களவீரர் அலிரெஸா ஜஹன்பஹாஷுடன் மோதிய பின்னர், தனது தலையால் அவர் மீது கைல் வோக்கர் மோதியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .