2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக லூயிஸ்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக, உள்ளூர்ப் போட்டிகளில் இங்கிலாந்தில் முன்னர் விளையாடியிருந்த ஜோன் லூயிஸ், அடுத்தாண்டு உலகக் கிண்ணம் வரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இங்கிலாந்து கவுண்டி அணியான டேர்ஹாமின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவிருந்த ஜோன் லூயிஸ், நியூசிலாந்துக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின்போது இணைந்து கொண்டு, தற்போதைய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான இலங்கையின் முன்னாள் வீரர் திலான் சமரவீரவை பிரதியீடு செய்யவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .