2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: நியூசிலாந்துக் குழாமில் சோதி, பிளன்டெல்

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், நிச்சயமற்றதாக இருந்த இரண்டு இடங்களை சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி, விக்கெட் காப்பாளர் டொம் பிளன்டெல் ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.

மிற்செல் சான்ட்னெருக்கு அடுத்ததாக இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் யார் என்ற நிலையில், டொம் அஸ்டிலைத் தாண்டி இஷ் சோதி குழாமில் இடம்பெற்றதுடன், டொம் லேதமுக்கு அடுத்ததாக விக்கெட் காப்பாளர் யார் என்ற நிலையில், டிம் செய்ஃபேர்ட்டைத் தாண்டி டொம் பிளன்டெல் குழாமில் இடம்பிடித்துள்ளார்.

இதில், நியூசிலாந்து சார்பாக, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ள டொம் பிளன்டல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குழாமில் தனதிடத்தை கொலின் மன்றோ தக்க வைத்துக் கொண்டுள்ளபோதும், மார்ட்டின் கப்திலுடன், ஹென்றி நிக்கொல்ஸே ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவர் மேலதிகத் துடுப்பாட்டவீரராகவே காணப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, டவ் பிறேஸ்வெல்லைத் தாண்டி, ஜிம்மி நீஷமும், கொலின் டி கிரான்ட்ஹொம்மும் சகலதுறைவீரர்களாக தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை வேகப்பந்துவீச்சாளர்களாக, ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூசன், டிம் செளதி, மற் ஹென்றி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,

குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கொல்ஸ், றொஸ் டெய்லர், டொம் லேதம், கொலின் மன்றோ, டொம் பிளென்டல், ஜிம்மி நீஷம், கொலின் டி கிரான்ட்ஹொம், மிற்செல் சான்ட்னெர், இஷ் சோதி, டிம் செளதி, மற் ஹென்றி, லொக்கி பெர்கியூசன், ட்ரெண்ட் போல்ட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .