2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: மயிரிழையிலேயே மேற்கிந்தியத் தீவுகளை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 ஜூன் 23 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், மன்செஸ்டரில் நேற்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் கார்லோஸ் பிறத்வெய்ட்டின் அதிரடிய காரணமாக மயிரிழையிலேயே நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

நியூசிலாந்து: 291/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 148 (154), றொஸ் டெய்லர் 69 (95) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷெல்டன் கோட்ரல் 4/56 [10], கிறிஸ் கெய்ல் 1/8 [2])

மேற்கிந்தியத் தீவுகள்: 286/10 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: கார்லோஸ் பிறத்வெய்ட் 101 (82), கிறிஸ் கெய்ல் 87 (84), ஷிம்ரோன் ஹெட்மயர் 54 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/30 [10], லொக்கி பெர்கியூசன் 3/59 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/22 [4], ஜேம்ஸ் நீஷம் 1/35 [6])

போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்

இந்நிலையில், செளதாம்டனில் நேற்று இடம்பெற்ற பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தானை இறுதியில் 11 ஓட்டங்களால் இந்தியா வென்றிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஆரம்பத்திலேயே தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மாவை முஜீப் உர் ரஹ்மானிடம் இழந்திருந்த நிலையில், முஜீப் உர் ரஹ்மான், மொஹமட் நபி, ரஷீட் கான், ரஹ்மட் ஷா, அணித்தலைவர் குல்படி நைப் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவேளைகளில் கைப்பற்றி ஓட்டங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் அணித்தலைவர் விராத் கோலியின் 67 (63), கேதார் யாதவ்வின் 52 (68), லோகேஷ் ராகுலின் 30 (53), விஜய் ஷங்கரின் 29 (41), மகேந்திர சிங் டோணியின் 28 (52) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

பதிலுக்கு, 225 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானின் முதல் எட்டு வீரர்களில் ஏழு வீரர்கள் ஆரம்பத்தைப் பெற்றிருந்தபோதும், இணைப்பாட்டங்கள் வளருகையில் மொஹமட் ஷமி, ஹர்டிக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இறுதி ஓவரில் அரைச்சதம் பெற்ற மொஹமட் நபியின் விக்கெட் உள்ளடங்கலாக மொஹமட் ஷமி ஹட்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 11 ஓட்டங்களால் ஆப்கானிஸ்ஹான் தோல்வியடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .