2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒப்பந்தத்தை இழந்தார் சபீர் ரஹ்மான்

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதற்தரப் போட்டியொன்றின்போது இரசிகரொருவரைத் தாக்கியதற்கான தண்டனையாக, பங்களாதேஷின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடனான மத்திய ஒப்பந்தம் நீக்கப்பட்ட்டுள்ளது.

இது தவிர, சபீர் ரஹ்மானுக்கு ஏறத்தாழ 25,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்கு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இவ்வாறாக தண்டவைக்குள்ளான முதலாவது கிரிக்கெட் வீரராக சபீர் ரஹ்மான் மாறியுள்ளார்.

ஒழுக்க செயற்குழுவின் நேற்றைய விசாரணையைத் தொடர்ந்தே, சபீர் ரஹ்மானுக்கான தண்டனைகளை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை சபீர் ரஹ்மான் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டாக்கா மெட்ரோ பொலிஸ் அணிக்கெதிரான ராஜ்ஷகி டிவிஷனிந்தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின் இரண்டாம் நாளான கடந்த மாதம் 21ஆம் திகதியே குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இரசிகரொருவரைத் தாக்கியதுக்கு மேலதிகமாக, விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது போட்டி மத்தியஸ்தருடன் சபீர் ரஹ்மான் தவறான முறையில் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற விசாரணையின்போது தனது நடவடிக்கைகளுக்கான சபீர் ரஹ்மான் மன்னிப் கோரியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில், பி பிரிவில் இடம்பெற்றிருந்த சபீர் ரஹ்மான் கடந்தாண்டு 30,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றிருந்தார்.

2016ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில், மோசமானதொரு ஒழுக்க மீறலொன்றுக்காக 16,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அபராதம் சபீர் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .