2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒய்வு பெற்றார் டானியல் சுபஸிச்

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரோஷிய கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளரான டானியல் சுபஸிச், சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு குரோஷிய அணியில் அறிமுகத்தை மேற்கொண்ட 33 வயதான டானியல் சுபஸிச், குரோஷியாவுக்காக 44 போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இதேவேளை, குரோஷிய அணியின் முன்கள வீரரான மரியோ மண்டூஸிக்கும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 32 வயதான மரியோ மண்டூஸிக் 2007ஆம் ஆண்டு குரோஷியாவுக்காக அறிமுகத்தை மேற்கொண்டு குரோஷியாவுக்காக 89 போட்டிகளில் விளையாடி 33 கோல்களைப் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .