2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குற்றச்சாட்டை மறுக்கிறார் சந்திமால்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே சென். லூசியாவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று நிறைவடையவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்தைச் சேதப்படுத்த முயன்ற குற்றச்சாட்டுகளை இலங்கையணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மறுத்துள்ளார்.

அந்தவகையில், குற்றச்சாட்டுக்களை மறுத்ததன் காரணமாக, குறித்த போட்டி முடிவடைந்த பின்னர், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை, போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஶ்ரீநாத்தால் நடாத்தப்படவிருந்த விசாரணையொன்றில் தினேஷ் சந்திமால் பங்கேற்கவிருந்தார்.

தனது நீளக்காற்சட்டையின் இடது புற சட்டைப்பையிலிருந்து இனிப்புக்களை எடுத்த தினேஷ் சந்திமால், அவற்றை வாயில் போட்டு விட்டு பின்னர் செயற்கையான பதார்த்தத்தை பந்தில் போட்டதாக, குறித்த போட்டியின் இரண்டாம் நாள் காணொளிகள் காண்பித்ததாகத் தெரிவித்தே தினேஷ் சந்திமால் மீது பந்தின் தன்மையை மாற்ற முனைந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்ததாக சர்வதேச கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டியின் மூன்றாம் நாள் ஆரம்பத்தில், வெளிப் பதார்த்தமொன்றைப் பயன்படுத்தி, இரண்டாம் நாளில் பந்தின் தன்மை மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த போட்டியைக் கைவிடுவதற்கு வீரர்களும் அணி வீரர்களும் தயாரானதாகவும் எனினும் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வா உள்ளிட்டோரின் அலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்தே இலங்கை போட்டியில் பங்குபற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .