2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொன்ககாப்: ஜமைக்கா, மெக்ஸிக்கோ வெற்றி

Editorial   / 2017 ஜூலை 11 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் சங்கக் கால்பந்தாட்டக் கூட்டமைப்பால் (கொன்ககாப்) நடத்தப்படும் கொன்ககாப் தங்கக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில், ஜமைக்கா, மெக்ஸிக்கோ ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

குரோசா அணியை எதிர்கொண்ட ஜமைக்கா அணி, போட்டியின் 2ஆம் பாதியில் பெற்றுக் கொண்ட 2 கோல்களின் உதவியுடன், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மெக்ஸிக்கோ, எல் சல்வடோர் அணிகளுக்கிடையிலான போட்டியில், மெக்ஸிக்கோ அணி, 8ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுக்கு, 10ஆவது நிமிடத்தில் எல் சல்வடோர் பதிலளித்த போதிலும், அதன் பின்னர் 2 கோல்களைப் பெற்ற மெக்ஸிக்கோ, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .