2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமநிலையில் பார்சிலோனா, றியல் மட்ரிட் போட்டி

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரின் பார்சிலோனா, றியல் மட்ரிட் அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

பார்சிலோனாவின் மைதானத்தில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த போட்டியில், சக முன்கள வீரரான கரிம் பென்ஸூமாவிடம் றியல் மட்ரிட்டின் இளம் முன்கள வீரரான வின்சியஸ் ஜூனியர் கொடுத்த பந்தை அவர் சக வீரர் லூகாஸ் வஸ்கூஸிடம் கொடுக்க, அவரதை போட்டியின் ஆறாவது நிமிடத்தில் கோலாக்க ஆரம்பத்திலேயே றியல் மட்ரிட் முன்னை பெற்றது.

தொடர்த போட்டியின் 31ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் முன்கள வீரர் மல்கொம், அபாரமாக உதைந்த பிறீ கிக்கை தலையால் முட்டிக் கோலாக்க அவரின் சக மத்தியகள வீரர் இவான் றகிட்டிச் முயன்றபோதும் அது கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றிருந்தது.

பின்னர், 57ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் முன்கள வீரர் லூயிஸ் சுவாரஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்து, றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸால் தடுக்கப்பட்டு மீண்டும் வர அதை மல்கொம் கோலாக்கியதோடு பெற்ற கோலுடன் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியில், பார்சிலோனாவின் நட்சத்திர முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி 63ஆவது நிமிடத்திலும் றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரரான கரெத் பேல் 64ஆவது நிமிடத்திலுமே களமிறங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .