2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமநிலையில் லிவர்பூல், ஆர்சனல் போட்டி

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனல் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் லிவர்பூல் அணிக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியில், ஆர்சனல் அணியின் கோல் காப்பாளர் பேர்ண்ட் லெனோவால் தடுக்கப்பட்ட பந்தொன்று ஆர்சனலின் பின்கள வீரர் றொப் ஹோல்டிங்கில் பட்டு வந்திருந்த நிலையில், போட்டியின் 61ஆவது நிமிடத்தில் அதை கோல்காக்கிய லிவர்பூல் அணியின் தலைவர் ஜேம்ஸ் மில்னர் தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், குறித்த முன்னிலையுடன் லிவர்பூல் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், போட்டி முடிவடைய எட்டு நிமிடங்கள் இருக்கையில், ஆர்சனலின் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே பெற்ற கோலோடு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி சார்பாக, எரிக் லமேலா, லூகாஸ் மோரா, ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் அணி சார்பாக, ருபென் நெவெஸ், றாவுல் ஜிமென்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஏ.எவ்.சி போர்ண்மெத் அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, அன்டோனி மார்ஷியல், மார்க்கஸ் றஷ்போர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஏ.எவ்.சி போர்ண்மெத் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் வில்சன் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .