2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பியனாகினர் நடால், ஸ்விட்டொலினா

Editorial   / 2018 மே 21 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் தலைநகர் றோமில் இடம்பெற்றுவந்த இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவுகளில், தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள ஸ்பெய்னின் ரபேல் நடால், நான்காம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டொலினா ஆகியோர் சம்பியனாகியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரெவ்வை எதிர்கொண்ட 16 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால், 6-1 என்ற ரீதியில் முதலாவது செட்டை மிக இலகுவாகக் கைப்பற்றினார்.

எனினும் சுதாகரித்துக் கொண்ட அலெக்ஸான்டர் ஸவ்ரெவ், இரண்டாவது செட்டை 6-1 எனக் கைப்பற்றியதுடன், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 3-1 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், மழையால் போட்டி நீண்ட நேரம் தடைப்பட்டு மீள ஆரம்பித்தவுடன் அபாரமான மீள் வருகையை நிகழ்த்திய 31 வயதான ரபேல் நடால், 6-3 என்ற நிலையில் மூன்றாவது செட்டை வென்று, எட்டாவது தடவையாக இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனாகிக் கொண்டார்.

அந்தவகையில், மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் எட்டாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்மிடம் தோல்வியடைந்ததையடுத்து, தரவரிசையில் முதல்நிலையை 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரிடம் பறிகொடுத்த ரபேல் நடால், மேற்படி தொடரில் சம்பியனானதன் மூலம் மீண்டும் முதல்நிலையை அடைந்து கொண்டார்.

இந்நிலையில், நடப்புச் சம்பியனான 23 வயதான எலினா ஸ்விட்டொலினா, தான் கடந்த முறை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வென்று தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இத்தொடரில் சம்பியனாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .