2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனானது றியல் மட்ரிட்

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத்தில் றியல் மட்ரிட் சம்பியனாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியில், பிரேஸிலியக் கழகமான கிறேமியோவை வென்றே, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில், கிறேமியோவின் நேர்த்தியான பின்களத்தை உடைக்கும் முயற்சிகளில் றியல் மட்ரிட் வெறுப்படைந்த நிலையில், முதற்பாதியில் றியல் மட்ரிட்டே பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும் கோல் பெறுவதற்கான 10 முனைப்புகளில் ஓன்று மட்டுமே கோல் கம்பத்தை நோக்கியதாக இருந்திருந்தது.

இந்நிலையில், நீண்ட தூரத்திலிருந்தான கோல் பெறும் லூகா மோட்ரிக், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோரது முயற்சிகளும் பலன்தந்திருக்கவில்லை.

எவ்வாறெனினும், போட்டியின் 53ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து கிடைத்த பிறீ கிக்கை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்க, இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றிருந்தது.

அந்தவகையில், தனது மூன்றாவது கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் குறித்த கோலுடன் நான்காவது கோலைப் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, முக்கியமான இறுதிப் போட்டிகளில் கோல் பெறுவதை மீண்டும் அரங்கேற்றினார். ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் மூன்று இறுதிப் போட்டிகளில் மூன்று கோல்களைப் பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரின் இரண்டு இறுதிப் போட்டிகளில் இரண்டு கோல்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, கழக உலகக் கின்ணத்தோடு சேர்த்து, சம்பியன்ஸ் லீக், லா லிகா, ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளத்தின் சுப்பர் கிண்ணம், ஸ்பானிய சுப்பர் கிண்ணம் என ஐந்து கிண்ணங்களை இவ்வாண்டு றியல் மட்ரிட் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .