2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவிடம் தோற்றது றியல் மட்ரிட்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிமிரவு இடம்பெற்ற குழு ஜி போட்டியொன்றில் ரஷ்யக் கழகமான சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவிடம் நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட் தோற்றது.

தமது குழுவில் ஏற்கெனவே முதலிடத்தை ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்த ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், தமது ஆரம்ப அணியின் கரெத் பேல், டொனி க்றூஸ் ஆகியோரை ஆரம்பத்தில் களமிறயிருக்காததோடு, அணித்தலைவர் சேர்ஜியோ ராமோஸ், லூகாஸ் மோட்ரிட்ச் உள்ளிட்டோரை போட்டி முழுதும் களமிறயிருக்கவில்லை.

இந்நிலையில், போட்டியின் 37ஆவது நிமிடத்தில் பியோடோர் சலோவ் பெற்ற கோலின் முன்னிலை பெற்ற சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணி, அடுத்த ஆறாவது நிமிடத்தில் ஜியோர்ஜி ஷுசென்னிகோவ் பெற்ற கோலுடன் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியதுடன் 73ஆவது நிமிடத்தில் அர்னோர் சிகோர்ட்ஸன் பெற்ற கோலுடன் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேவேளை, நேற்றிரவும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையும் இடம்பெற்ற பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

யங் போய்ஸின் மைதானத்தில், குழு எச்

யங் போய்ஸ் 2-1 ஜுவென்டஸ்

முதற்பாதி முடிவில் 1-0

குய்ல்லாயுமே ஹொராரு 30 (பெனால்டி), 68 போலோ டிபாலா 80

 

வலென்சியாவின் மைதானத்தில், குழு எச்

வலென்சியா 2-1 மன்செஸ்டர் யுனைட்டெட்

முதற்பாதி முடிவில் 1-0

கார்லோஸ் சொலர் 17   மார்க்கஸ் றஷ்போர்ட் 87

பில் ஜோன்ஸ் 47 (ஓவ்ண் கோல்)

 

அஜாக்ஸின் மைதானத்தில், குழு ஈ

அஜாக்ஸ் 3-3 பெயேர்ண் மியூனிச்

முதற்பாதி முடிவில் 0-1

டுஸன் டடிக் 61, 82 (பெனால்டி) றொபேர்ட் லெவன்டோஸ்கி 13, 87 (பெனால்டி)

நிக்கொலஸ் தக்லிபிக்கோ 90+5 கிங்ஸ்லி கோமன் 90

 

விக்டோரியா பிளிஸினின் மைதானத்தில், குழு ஜி

விக்டோரியா பிளிஸின் 2-1 றோமா

முதற்பாதி முடிவில் 0-0

ஜான் கொவாரிக் 62   சென்கிஸ் அன்டர் 67

தோமஸ் குறொய் 72

 

மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில்,

மன்செஸ்டர் சிற்றி 2 -1 1899 ஹொபென்ஹெய்ம்

முதற்பாதி முடிவில் 1-1

லெரோய் சனே 45+1, 61   அன்ட்ரேஜ் கிரமரிச் 16 (பெனால்டி)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .