2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செல்சி – ஆர்சனல் போட்டி சமநிலை

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற செல்சி, ஆர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், எவெர்ற்றனை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது.

செல்சி, ஆர்சனல் அணிகளுக்கிடையே, செல்சியின் கழக மைதானத்தில் போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. அந்தவகையில், இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி கிடைத்திருந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில், செல்சியின் மைதானத்தில், புள்ளியொன்றை ஆர்சனல் பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

குறித்த போட்டியின் இறுதிக் கணங்களில், ஆர்சனலின் சீட் கொலசினாக் மீது போட்டி விதிமுறைகளை மீறி செயற்பட்டமை காரணமாக, செல்சியின் டேவிட் லூயிஸ் சிவப்பு அட்டை காட்டப்பெற்று வெளியேற்றப்பட்டார்.

மேற்படி போட்டியின் முதலாவது பாதியில், செல்சியின் சிறந்த வாய்பொன்றை பெட்ரோ தவறவிட்டிருந்தார். பெட்ரோ, ஆர்சனலின் கோல் காப்பாளர் பீற்றர் செக்கால் தடுக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, ஆர்சனலும் கோல் பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. டனி வெல்பக் தலையால் முட்டிய பந்தொன்று, கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. ஆரோன் றம்ஸியின் உதை கோல் கம்பத்தில் பட்டிருந்தது. இது தவிர, அலெக்ஸான்ரே லகஸ்ரேயின் உதையொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.

இந்நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட், எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, அந்தோனியோ வலென்சியா, ஹென்றிக் மிகித்திரயான், றொமேலு லுக்காக்கு, அந்தோனி மார்ஷியால் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .