2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செல்சி – ஆர்சனல் போட்டி சமநிலை

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற செல்சி, ஆர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியின் இறுதி நேரத்தில், ஆர்சனலின் ஹெக்டர் பெல்லெரின் அதிரடியாகப் பெற்ற கோல் காரணமாகவே இப்போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இரண்டு அணிகளும் 33 கோல் பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தபோதும் செல்சியின் கோல் காப்பாளர் திபோட் கோர்துவா, ஆர்சனலின் கோல் காப்பாளர் பீற்றர் செக் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டமை காரணமாக, மொத்தமாக நான்கு கோல்களே பெறப்பட்டிருந்தன.

ஆர்சனலின் அலெக்ஸிஸ் சந்தேஸ், அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே ஆகியோரின் உதைகளை திபோட் கோர்துவா அபாரமாகத் தடுத்திருந்தபோதும், ஜக் வில்ஷயர் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக ஆர்சனல் முன்னிலை பெற்றது. இதில், 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் பிறீமியர் லீக் போட்டியொன்றில் ஜக் வில்ஷயர் பெறும் முதலாவது கோல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த முன்னிலை வெறும் நான்கு நிமிடங்களுக்கே நீடித்தது. ஹெக்டர் பெல்லெரினால் ஈடின் ஹஸார்ட் வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியஐ ஈடின் ஹஸார்ட் கோலாக்க கோல் எண்ணிக்கையை செல்சி சமப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மாற்று வீரராகக் களமிறங்கிய செல்சியின் டேவிட் ஸப்பகோஸ்டா வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை போட்டியின் 84ஆவது நிமிடத்தில் மார்கோஸ் அலோன்ஸோ கோலாக்க செல்சி முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், இரண்டாவது மேலதிக நிமிடத்தில் ஹெக்டர் பெல்லெரின் பெற்ற அபாரமான கோலால், 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியில் காணப்பட்ட 33 கோல் பெறும் வாய்ப்புகளில் 19 செல்சியினுடையாதாகவே இருந்த நிலையில், பீற்றர் செக்கை மாத்திரம் கொண்டிருந்த தனித்த வாய்ப்புகளை செல்சியின் அல்வரோ மொராட்டா வீணாக்கியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .