2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸில் இணைகிறார் றம்சி

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் மத்தியகள வீரரான ஆரோன் றம்சி, கோடைப் பருவகாலத்தில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுடன் இணையும் ஒப்பந்தத்துக்கு முன்னரான இணக்கமொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இதன் மூலம் வாரமொன்றுக்கு 400,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு மேல் றம்சி பெறவுள்ளார்.

28 வயதான றம்சி, நான்காண்டு ஒப்பந்தமொன்றுக்கு இணங்கியுள்ள நிலையில், சுயாதீன வீரராக, 11 ஆண்டுகள் ஆர்சனலில் இருந்ததை முடிவுக்கு கொண்டு வந்து ஜுவென்டஸில் இணைகிறார்.

ஸ்பானிய லா லிகா கழகங்களான பார்சிலோனா, றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன்  உட்பட பல ஐரோப்பியக் கழகங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதைத் தொடர்ந்து, ஜுவென்டஸை தேர்வுசெய்த வேல்ஸின் சர்வதேச கால்பந்தாட்ட வீரரான றம்சி, இரண்டு பகுதி மருத்துவ பரிசோதனைகளில் கடந்த மாதம் தேறியிருந்தார்.

றம்சியின் ஆர்சனலுடனான ஒப்பந்தம், இவ்வாண்டு ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகையில், அவர் ஆர்சனலை விட்டு வெளியேறும்போது எவ்வித தொகையையும் ஆர்சனல் பெறாது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை உறுதிசெய்த ஜுவென்டஸ், 3.7 மில்லியன் யூரோக்கள் செலவேற்றபட்டுள்ளதாகத் தெரிவித்தபோதும் அது எந்தத் தொகையெனக் கூறியிருக்கவில்லை.

ஆர்சனலுக்காக 259 போட்டிகளில் விளையாடிய றம்சி, 61 கோல்களைப் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .